இரண்டு மரணங்கள் – சிறுகதை – கணினிக்கிறுக்கன்

In: Tamil

By Bakshi Gulam

16 Oct 2017

மரணம் – 1

குடிகார குடும்பத்தலைவன். அவ்வப்போது பிரம்மை பிடித்தாற்போலிருக்கும் மனைவியும், திருமண வயதில் ஓர் மகளும். குடும்பத்தையே காக்கும் வாலிப மகனோ சடலமாய் வாயிலிலே. இலட்சத்தில் ஒருவருக்கு வரும் நோய்யாம் – பாவம் இந்த வாலிபனையா தாக்க வேண்டும்? இறந்து கிடப்பது தன் மகன் என்றறியாத தாய். அண்ணன் சாவுக்கு கதறி அழும் தங்கை. தங்களால் ஒன்றும் செய்ய இயலவில்லையே என்ற ஆதங்கத்தில் நண்பர்கள். மகன் சடலத்தின் மீது மண் அள்ளிப்போட முடியாத தந்தை. வருந்தி இருப்பார் நிச்சயமாக 30 ஆண்டுகால மது அடிமைத்தனத்தை.

இறுதிச்சடங்குகளை நிறைவேற்ற உதவுகிறார் சித்தப்பா. அண்ணன் குடும்பத்தின் மீது பாசமா? அண்ணன் மகனும் தன் மகன் போலாயிற்றே என்ற கடமை உணர்ச்சியா? அல்லது ஒரு இறப்பின் போது உதவும் மனித நேயமா? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் உறவினராயிற்றே!

இனிமேல் தன்னால் பணியாற்ற முடியாது என்பதறிந்து விருப்ப ஓய்வு பெற முடிவு செய்கிறார் அண்ணன். அரசாங்க காரியகிரமங்களை நிறைவு செய்யவும் தம்பியே உதவுகிறார் – ஒரு சிறிய மாற்றத்துடன். தனக்குப்பின் பலன்களைப்பெற யாரை முன்மொழிகிறீர்கள்? (Nominee) என்கிற இடத்தில் அண்ணனின் மனைவிக்கு பதிலாக தன் பெயரையும், ஓய்வூதிய தொகை பெரும் வங்கிக்கணக்கில் அண்ணனது கணக்கிற்கு பதிலாக தன்னுடன் அண்ணனும் இணைந்த புதிய கூட்டு கணக்கையும் சமர்பிக்கிறார். நிறைய இலஞ்சமாக செலவு செய்திருப்பார் போலும். கூட்டு கணக்கிற்கு ATM card யும் தருகிறது வங்கி – மற்றுமோர் விதிமுறை மீறல். பணம் தான் பாதாளம் வரை பாயுமே நம் நாட்டில்!

“அண்ணன் என்னடா? தம்பி என்னடா? அவசரமான உலகத்திலே…” என்பதை நிரூபித்துவிட்டார். அட எரியும் வீட்டில் பிடுங்கியவரை இலாபம் தானே? மறுமையில் நம்பிக்கை இல்லாதிருப்பின் எரித்திருப்பேன் அவனை முச்சந்தியில் உயிரோடு! கலி முற்றிவிட்டதென்பது உண்மைதானோ? இறந்துவிட்டதா மனிதநேயம்?

மரணம் – 2

மற்றுமொரு மரணம். இது வணிக வன்முறை நிகழ்த்திக்கொண்டிருக்கும் இக்கால மருத்துவமனைகளினால். ஒன்பது மாதங்கள் – பிடுங்கினார்கள் அனைத்தையும் – வீடு, வாசல், நகை – இறுதியில் அந்த பெண்ணின் தலிக்கயிற்றையும்! ஆதரவற்று நின்றாள் அவள் பள்ளிச்செல்லும் இரண்டு சிறார்களை கையில் பிடித்தபடி.

“கொஞ்ச நாளைக்கு வாடகை தரலைன்னா பரவாயில்லை மா. நா அப்புறமா வாங்கிக்கிறேன்” – சென்ற மாதம் வரை வாடகைக்கும், மின் கட்டணத்துக்கும் சண்டை போட்ட வீட்டு உரிமையாளரிடம் இருந்து உதிர்ந்த வார்த்தைகள் இவைகள்!

“எங்க பள்ளியில் ஆசிரியர் பணியிடம் ஒன்று காலியாக உள்ளது. உங்களுக்கும் கவலைய மறக்க ஒரு வாய்ப்பா இருக்கும். குடும்ப பொருளாதாரத்துக்கும் உதவியா இருக்கும். யோசிச்சு சொல்லுங்க” என்கிறார் அந்த சிறார்களின் பள்ளி தலைமை ஆசிரியர். கலி முற்றிவிட்டது என்கிறார்கள். அனால் இருபத்தோராம் நூற்றாண்டிலும் காண முடிகிறது மனிதருள் மாணிக்கங்களை! உணர முடிகிறது மனித நேயத்தை!!

Comment Form

(required)

Welcome Web-Surfers!

This is Bakshi Gulam. I’m a programmer, a blogger and an open-source lover interested in anything related to computer systems. Click here to read my bio.

Calendar

October 2017
M T W T F S S
« Jan   Jan »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031